பக்கம்:கொய்த மலர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் .63; முடிவுரை இவ்வாறு சிறந்த பெயரால் போற்றப்படும் தெய்வ நெறி சங்க காலத்திய நெறி என்பதும், அத்தெய்வ. வரிசையில் சிவனே முதல் இடம் பெற்றுப் போற்றப் பட்டான் என்பதும், அதனல் சங்க காலத்தில் சைவமே தலைசிறந்து ஓங்கிய மெய்ச்சமயமாகி விளங்கியது. என்பதும், தென்னடுடைய சிவன் பின் எங்காட்டவருக். கும் இறையாகத் தொடங்கிய காலம் அதுதான் என் பதும், சங்ககாலத் தமிழ் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து. மெய்மைகெறிச் சைவமாம் சமயம் சார்ந்து தழைத்தனர். என்பதும் அறியக் கிடக்கின்றன. - சங்க காலத்தில் இவ்வாறு இறைவனைப் போற்றிய அடியார்கள் வெறும் புறத் தோற்றத்தால் மட்டும் வழி: பாடு ஆற்ருது, அக கிலேயிலேயே ஆண்டவனேக் கண்டு. அறமாற்றி, ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்ருேர் களாக வாழ்ந்தார்கள் என்பதை நன்கு உணரவேண்டும். அதேைலயே அக்காலத்தை ஒட்டி எழுந்த குறளில், வள்ளுவர், ' மழித்தலும் நீண்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் " எனறும, " மனத்துக்கண் மாசாக மாண்டார் நீராடி மறைந் தொழுகும் மாந்தர் பலர் " என்றும், இன்னும் பலவகையிலும் எடுத்துக் காட்டு கின்ருர். அன்பின் வழியது உயிர் கிலே’ என காட்டி, அதன் வழி அன்பே இறைவன் என விளக்கி, மக்கள் அன்புகொண்டு வாழ்வதே மெய்ச் சமய நெறி என்பதை. வள்ளுவரும் பிறரும் தெள்ளத்தெளிய விளக்குகின்றனர். எனவே, சங்க காலத்தில் சிவனை வழிபட்ட மெய்ச் சைவ மக்கள் உள்ளும் புறமும் ஒத்தவராய்-தனக்கென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/65&oldid=812542" இலிருந்து மீள்விக்கப்பட்டது