பக்கம்:கொய்த மலர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†4 கொய்த மலர்கள். வாழாப் பிறர்க்குரியாளராய்-தாமின் புறுவது உலகின் புறக் காணும் தக்கோராய்-மனம் மொழி மெய் என்ற மூவிடத்தும் ஒன்றிய தூய்மை உடையவராய்எல்லாரும் இன் புற்றிருக்க கினைக்கும் பண்பாளராய்அவனன்றி ஒரனும் அசையாது என்ற திண்ணிய கம்பிக்கை கொண்டு அதல்ை தன் முனைப்பு என்பது அற்ற சீலராய்- முயற்சியும் ஆக்கப்பணியும் மேற் கொண்டு தம் செயலில் வெற்றி பெறினும் செம்மாக் காது ஆருயிர் முறைவழிப் படும் என்ற உண்மை உணர்ந்த செம்மை கலம் சான்ற தக்கோராய் வாழ்ந்து வந்தார் கள் என்பது ஈண்டு நாம் நினைக்க வேண்டுவதாகும். இவற்றுக்கெல்லாம் எடுத்துக் காட்டுக்கள் பலப்பல காட்டிக்கொண்டே செல்லலாம். இவை அனைத்தும் கன்மக்கள் உணர்வாதலின், அவர் காட்டும் மெய்நெறி வழி உலகும் சிறக்கும் என்ற நம்பிக்கையோடு அவற்றை ஈண்டு நான் காட்டாது அமைகின்றேன். சைவம்.சங்க கால மெய்ச் சைவம்-உள்ளும் புறமும் ஒத்த சைவம். உலகம் அனைத்தையும் ஒம்பும் சைவம்-ஓரறிவுயிரும் ஒத்தது என உணரும் சைவம்-தரணியில் சிறக்க என வாழ்த்துகிறேன். அச் சைவநெறி தழைத்தோங்க இச் சமாசமும் ஆவன செய்யும் என்ற கம்பிக்கையோடு என் பேச்சையும் முடித்துக் கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/66&oldid=812544" இலிருந்து மீள்விக்கப்பட்டது