பக்கம்:கொய்த மலர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பேர் வேண்டேன்* உலகில் பண்டுதொட்டுக் கோடிக்கணக்கான உயிர் கள் தோன்றி வாழ்ந்து மறைகின்றன. மனிதர் எண் ணற்றவராகி வந்து வந்து செல்கின்றனர். அவர் அத்தனை பேரையும் இன்று உலகம் எண்ணுவதில்லை. எங்கோ ஒரு . சிலரைத்தான் உலகம் போற்றுகின்றது. 'தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராக இருந்த ஒரு சிலரையே உலகம் மதிக்கிறது; போற்றிப் புகழ்கிறது. அவ்வாறு புகழப் பெற்றவரோ அப் புகழ்ச்சியைத் தமக்கு வேண்டா எனவே ஒதுக்கி விடுகின்றனர். அதற்குக் காரணம் அப் புகழும் பிறர் பொருமைப்படக் காரணமாகின்றது. என்பதை நன்கு அவர்கள் அறிவதேயாம். அவ்வுண் மையை நன்கு அறிந்த சங்க கர்லப் புலவர் கணியன் பூங்குன்றனர். - பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ' என்று விளக்கி, அதற்குரிய காரணத்தையும், ஆருயிர் நீர் வழிப்படும் புணைபோல் தன் முறைப்படும் திறத்தால் காட்டிச் சென்ருர். இவ்வுண்மை எக்காலத்திலும் ஒத்து நடைபெறுவதாகும். - இந்த இருபதாம் நூற்ருண்டின் நாகரிகத்திடை யிலும் இவ்வுண்மையைக் காணமுடிகிறது. சிலர் உடல் வருந்திப் பொருள் செலவிட்டுச் செம்மைப் பணி ஆற்றுவ தால் புகழ் பெறுகின்றனர். சிலர் அறிவு நலம் காட்டி அரும் புகழ் பெறுகின்றனர். சிலர் தம் ஆணவழி அன்பு. அவளிவணல்லூர் சட்டநாதர் குடமுழுக்கு விழா மலர் (பிப். 60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/67&oldid=812547" இலிருந்து மீள்விக்கப்பட்டது