பக்கம்:கொய்த மலர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கைத்தறி ஆடைகள் : மனிதன் நாகரிகத்தின் முதற்படியில் என்று கால் வைக்கக் கற்றுக் கொண்டானே, அன்றே அவனுக்கு ஆடை தேவையாக இருந்தது. மனிதன் தோன்றி வளர்ந்த வரலாற்றின் கால எல்லே இன்னும் அம் மனித ஆராய்ச்சிக்கு எட்டாமலேயே சென்று கொண்டிருக் கின்றது. எனினும் அந்த நாகரிக வரலாற்றில் சில மைல் கற்களை இன்றைய மனிதேைல காண முடிகின்றது. அக் கற்களில் ஒன்றே அவன் ஆடை தேடிக் கொண்ட எல்லேயில் கடப்பட்டதாகும். மனிதன் விலங்கிலிருந்து தோன்றி, வேறுபட்டு வாழத் தொடங்கிய காலம் எத்தனையோ ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர். அந்தத் தோன்றிய காலத்தில் அவன் நிச்சயமாக இன்றைய நிலையில் இருந்திருக்க முடியாது. விலங்கொடு விலங்காத ஆடையற்று கிருவாணமாகத் திரிந்து, கண்டதைத் தின்று காலம் கழித்திருப்பான். விலங்கொடு விலங்காகக் கண்டதைத்தின்ற மனிதனுக்கு மன உணர்வு தோன்றிய நிலையிலேயே அவன் தன்னைச் சுற்றிக் கண்டு உணரத் தொடங்கி யிருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது விலங்கினும் தான் வேறுபட்ட வன் என்றும், அதனினும் மேம்பட்டவன் என்றும் உணர்க் திருப்பான். அந்த வேற்றுமை உணர்ச்சியின் இடையிலே அவன் எண்ணம் நீண்டிருக்கும். தன் அகத்தில் எழும்பும் எண்ணங்ககாப் பிறர் அறியாது மூடி வைக்கும் முறை யிலே, தனது புறத்துறுப்புகளில் சிலவற்றையும் முடி

  • 7-2-60இல் கைத்தறி வார விழாவில் ஆற்றிய

சொற்பொழிவு, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/7&oldid=812553" இலிருந்து மீள்விக்கப்பட்டது