பக்கம்:கொய்த மலர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கொய்த மலர்கள் பணத்தை அதற்குச் செலவிட்டார். அரசனும் சமயப் பற்று உடையவன் ஆதலின் அதற்கு இசைவான் எனவும், பிறகு வேறு பொருள் கொணடு குதிரை வாங்கலாம் எனவும் அவர் உள்ளம் எண்ணிவிட்டது போலும். எனவே செயல் தொடங்கப் பெற்றது. கடைசியில் குதிரை வாங்கவில்லையே என அரசன் ஆள் அனுப்பிய போதுதான் தன் கிலே உணர்ந்தார். ஆயினும் அவர் அரசனிடம் கொண்ட பொருளைக் கோயிற் பணிக்குச் செலவிட்டதைக் கூறியிருந்தால் அவன் மகிழ்ந்து குதிரை வாங்க வேறு பொருள் கொடுத்திருக்கக் கூடும். வாத ஆரர் அவ்வாறு செய்யாது, இறையருளால் ஆவணிமூலத்' தன்று குதிரை வரும் என உணர்ந்து அவ்வாறே அரசனி டமும் சொல்லிவிட்டார். அரசன் அனைத்தும் அறிவான். பணம் பணிக்குச் செலவாயிற்று எனவும் தெரியும். எனினும் ஆவணிமூல' எல்லே அமைத்த வாதவூரரை அவன் ஒன்றும் செய்யவில்லை. காரணம், அவனுக்கு அச் செயல் உடன்பாடு என்பதுதான். அனைத்தும் அறிந்து அவன் இருந்த கிலையை, புரசைமா வயப்புரவிதேர்ப் பொருநர்போய்ப் பொறி வண்டு இரைசெய்தார் முடிவேந்தன்முன் இறைஞ்சினர் உள்ளது உரைசெய்தார் அதுகேட்டு ஒன்றும் உரைத்திலன் இருந்தான். கிரைசெய்தார் பரிவரவினை நோக்கிய நிருபன் (62)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/70&oldid=812555" இலிருந்து மீள்விக்கப்பட்டது