பக்கம்:கொய்த மலர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - கொய்த மலர்கள் எனப் பேசும் அளவுக்குச் செல்லவைத்தது. காட்டு மக்களும் பாண்டிய மன்னனும் ஒருசேர வாதவூரரைப் புகழ்வதைப் பொறுக்காத ஒரு சிலர் தம் செயலால் மாணிக்கவாசகருக்கு அல்லல் பல இழைத்தனர். எனினும், கடைசியில் இறைவனல் தெளியப் பெற்ற பாண்டியன், தொல்லை நீர் உலகமாண்டு சுடுதுயர் நரகத்தாழ வல்லை.என் அறிவுக்கேற்ற வண்ணமே செய்தேன் நீர்என் எல்லைத்தீர் தவப்பேருய்வந்து இகபர ஏதுவாகி அல்லல்வெம் பிறவி நோய்க்கு அருமருந்தானீர் ஐயா (மண்சுமந்த 68) என்று அவர் அடி வணங்கிப் போற்றினனெனினும், மாணிக்கவாசகர் மறுபடியும் அவனிடம் அமைச்சராக இருக்க விரும்பவில்லை. முன் இறையன்பு பூண்ட பிறகும் அரசன் தன்னைப்போல அன்புடையவன் என்றும், தனக் கென வாழாத தன்மையில் தான் ஆற்றும் செயல்கள் அவன் இயைந்தனவே என்றும் எண்ணிச் செயலாற்றினர். பின் தன் புகழ் கண்டு பொன்றிய உள்ளத்தார் வாய் மொழிக் கேட்டு முறைபிறழ்ந்து கின்றவனுேடு கூடா திருக்க நினைத்து அவனேவிட்டே பிரிந்துவிட்டார். அத் துடன் அங்கு இருந்தால் மேலும் மேலும் உள்ளத்தால் பொய்த்தொழுகும் பொருமையாளர்தம் புழுக்கம் அதிக மாகும் என எண்ணி, அவ்விடத்தைவிட்டுப் புறப்பட் டார். அதற்குப் பிறகும் ஓரிடத்திலும் கிலேத்து கின்று தன்னேப் பிறர் புகழும் வரையில் தங்குதல் இது என உணர்ந்தார். ஆம்! அந்த உணர்ச்சியில் எழுந்த 9ےLyم களேதாம் நாம் முதலில் கண்டவை. ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் என்று எண்ணி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கருதி ஊர்தோறும் இறைவனே நாடிப் புறப்பட்டார். அவர் தம் பேர் வேண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/72&oldid=812561" இலிருந்து மீள்விக்கப்பட்டது