பக்கம்:கொய்த மலர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மச் சமுதாயம் - 79 தான் போலும் கற்ருரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் என்றும் கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்று கூறிச் சென்ருர்கள். இப்படிக் கூறு வதால் நாட்டில் யாரையும் கற்க வேண்டாம் என்று கூறி யதாக கினைக்க வேண்டாம். கற்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இல்லை. ஆனல் கற்கும் வாய்ப்பை ஒரு சிலர் வைத்துக் கொண்டு, அதல்ை தாம் அதிகமாகக் கற்றுச் சமுதாயத்தில் மேலேற, மற்றவர் அதைக் கண்டு எங்கும் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதே. அவர்கள் கருத்து. மற்றும், இன்று நாட்டிலும் உலகிலும். நடைபெறுகின்ற அத்தனை கொடுமைகளுக்கும் காரணம் யார் என்று எண்ணிப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். ஒரு தலைமுறையில் இருபெரும் யுத்தம் உண்டாக்கியவர்கள் கற்றவர்களா? கல்லாதவர்களா? அ டு த் த போர் எப்போது தொடங்குமோ என்று மக்கள் உள்ளத்தில் மாளாப் பீதி உணர்ச்சியை ஊட்டிக்கொண்டிருப்பவர்கள் கற்றவர்களா? கல்லாதவர்களா? நாட்டில் பொருளாதார முட்டுப்பாட்டையும் பிற முட்டுப்பாடுகளையும் உண் டாக்கி மக்கள் வாழ்வைப் பாழாக்குபவர்கள் கற்றவர்கள் களா? கல்லாதவர்களா? ஆம்! எல்லாக் கொடுமைகளும் கற்றவர்களால்தாமே நடைபெறுகின்றன. இத்தகைய கற்றவர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் மக்களைக் கண்டே அறிஞர்கள் அவ்வாறு அஞ்சுகின்றனர். கற்றவர் தம் இலக்கணம் கூற வந்த வள்ளுவர். " தாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் எனக் காட்டுகின்ருர். எனவே, படித்தவர்கள் தம்மைப் போல் உலகில் மற்றவர் வாழ வேண்டும் என எண்ணு. பவராவர். இந்த உள்ளப்பாங்கு கற்றவருக்கும், புகழாள ருக்கும் - ஏன்? - செல்வருக்கும் கூட இருக்குமாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/81&oldid=812579" இலிருந்து மீள்விக்கப்பட்டது