பக்கம்:கொய்த மலர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கொய்த மலர்கள் காட்டில் ஒரு குறையும் இருக்காது. இல்லாத காரணத் தால்தான் நாட்டில் கிளர்ச்சிகளும், உலகில் போர்களும், மக்கள் உள்ளத்தில் தடுமாற்றங்களும் உண்டாகின்றன. அத்தடுமாற்றத்தைப் போக்க எல்லாருக்கும் எல்லாவற் றையும் சமமாகப் பகிர்ந்தளித்தலைத் தவிர வழி இல்லை. அதைத்தான் சமதர்மச் சமுதாயம் என்கின்றனர் அரசியல் வாதிகள். - கல்வியால் எல்லாரும் இன்புற்று வாழவேண்டும் என்ற உணர்வு உண்டானல், நாட்டில் கற்றவர் பெருகி யாதொரு வேறுபாடும் இல்லாமல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடி இணைந்து வாழ்வார்களன்ருே! புகழும் மக்களுள் மாறுபாட்டை உண்டாக்குகின் றது. வாழ்வின் சுழல்களும் பிற இயல்புகளும் சிலரைப் புக ழின் உச்சத்துக்குக் கொண்டு செலுத்துகின்றன. சிலர் எத்தனையோ தகுதிகள் பெற்றிருந்தும் புகழ்பெருது மாய்வதையும் காண்கின்ருேம். யாவ ராயினும் நால்வரைப் பின்னிடில் தேவர் என்பது தேரும் இவ்வையகம என்றபடி, யாராவது நான்கு பேர்பின்னல் வர இருந்தால் அவர்கள் உடனே தலைவராகத் தம்மை கினைத்துக் கொள்ளுகின்றனர். இது அரசியலுக்கு மட்டும் பொருங் துவதன்று. கல்வி, கலை, பிற அனைத்துக்கும் பொருந்தும். அதல்ை உண்மையிலேயே தகுதிபெற்றவர் வாடுவதோடு, மற்றவர் கண்டு பொருமைப் படத்தக்க நிலையும் உண் டாகிறது. கற்றவர்களுக்கிடையே இப்புகழால் உண்டா கும் பொருமையல்லவா புலவர் காய்ச்சல் என்ற ஒரு புதுமைப் பொதுத் தொடரையே உண்டாக்கி விட்டது. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு புலவர், இந்தப்புகழ் இகழ் இரண்டுமே வேண்டாமென் றும், ஆருயிர் முறைவழிப் படுவதால், சந்தர்ப்பமே ஒருவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/82&oldid=812581" இலிருந்து மீள்விக்கப்பட்டது