பக்கம்:கொய்த மலர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மச் சமுதாயம் 8.1% உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் காட்டுகிறதென்றும் கூறினர். கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று நீர் வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படும் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தன மாதலின் மாட்சியில் பெரியோரைப் புகழ்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - (புறம். 142): எனக் கணியன் பூங்குன்றனர் அன்றைக்குப் பெரியோரைப் புகழ்தல் இல்லையென்றும், அதனினும் முக்கியமாகச் சிறிய யோரை இகழ்தல் இல்லை என்றும் திட்டமாகக் காட்டு: கின்ருர், இந்தப் புலவர் வாய்மொழி இன்று உலகில்-இந்: தியாவில்-சிறப்பாக நம் தமிழ் காட்டில் ஏட்டளவிலாது. நாட்டு வாழ்வில் வருமானல் எத்தனையோ சிறு சிறு வேறு. பாடுகள் நீங்கி நன்மை உண்டாகுமே! ஆம்-கணியன் பூங்குன்றனர் காணவிழைந்த 'புகழின் சமதர்மம் காட்டில்தழைக்க என வாழ்த்திப் பொருளாதாரச் சமதர்மத்தைக் காண்போம். பொருளாதாரச் சமத்துவமே காட்டின் கல்வாழ்வுக்கு. அடிப்படையாகும் என்ற உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளாகவே பல அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆண்டவனே அன்பால் வழிபடும் அடியவர்களும்கூட மெய்ம்மை வழிபாட்டின் அடிப்படை இச் சமதர்மச் சிறப். பில்தான் அமைந்துள்ளது எனக் காட்டுகின்றனர். உண்பது நாழி உடுப்பன இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே! : (புறம். 148), என்று நக்கீரர் மக்கள் வாழ்வின் அடிப்படைகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றனர். எல்லா மக்களும் உண்ண உண்வும் உடுக்க உடையும் ஒருவித குறைபாடும் இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/83&oldid=812583" இலிருந்து மீள்விக்கப்பட்டது