பக்கம்:கொய்த மலர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:82 கொய்த மலர்கள் மல் பெறுதல் வேண்டும். அத்துடன் இருக்க இடமும் தேவை. இந்த வாழ்வின் அடிப்படையையும் பிறவற்றை யும் சேர்த்தே பிறவும் எல்லாம் ஒரொக் கும்மே, என்ருர், இந்த அடிப்படைகளே அனைவருக்கும் தேடித் தருவது தான் இன்றைய சமதர்மச் சமுதாயத்தின் அடிப்படை யாகும். நாட்டில் எல்லாச் செல்வங்களும் எல்லாருக்கும் பொருந்த இருக்குமானல் ஏற்றத்தாழ்வு காட்டில் இருக் காது. மாறுபாடு இருக்காது. பொய்யும் பொருமையும் அதிகமாக வளராது. அன்பும் அமைதியும் வாழும். ஆம்! அத்தகைய நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கமாட்டார் கள் என்கின்றனர் புலவர். கம்பர் கோசல நாட்டை ஒரு தெளிந்த நாடாகக் (Ideal State) காட்ட விழைகின்ருர். அந்த நாட்டில் எல்லாருக்கும் எல்லாச் செல்வங்களும் இருந்தனவாம். ஆகவே, பொருளால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ருே பெற்ருர் அற்ருர் என்ருே வேறுபாடு இல்லை எனக் காட்டு கின்ருர். - எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்ல மாதோ என்கிருர். அவருக்குப் பின்னல் வந்த சிவப்பிரகாசர் தாம் கண்ட கற்பனைகளாகிய வனசை மாநகரிலும், விளவல தேயத்திலும் ஒரே ஒரு குறைதான் இருந்தது என்றும், அது கொடுக்க நினைத்தாலும் வாங்கிச் செல்ல யாரும் பிச்சைக்காரர் கிடையாக் குறை என்றும், எனவே அந்த நாடும் நகரும் எல்லாச் செல்வங்களும் பெற்று விளங்கின என்றும் காட்டுகின்ருர். ' கொடுப்போர்க்கு இரப்பார் இல்லாத குறையொன் றுளது கூறுங்கால் ' (பிரபுலிங்கலீலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/84&oldid=812585" இலிருந்து மீள்விக்கப்பட்டது