பக்கம்:கொய்த மலர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதர்மச் சமுதாயம் 83 என்பது அவர் வாக்கு. இன்னும் சமயத் தலைவர்களாகிய அப்பர் சுந்தரர் இருவரும் இப் பொருட் சமத்துவத்தை கன்கு காட்டுகின்றனர். வாழ்வில் அமைதிகாண ஆண்ட வனை வழிபடுகின்றவர்கள் வைத்த பொருள் நமக்கு ஆம்’ என்று சொல்லி மனத்தடைத்து இருக்க வேண்டும் என அப்பர் காட்டுகின்ருர். சுந்தரரோ இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம் என்று இப்பிறப்பிற்குத் தேவையான சோற்றையும் ஆடையாகிய கூறையையும் இன்றியமையாதன எனக்கூறி, அவற்றைப் பெற்ற அடியவர் அமைதியாக இறைவனே வழிபடலாம் என்கின்ருர். இவ்வாறு சங்ககாலக் தொடங்கி இன்று வரை வந்த உண்மையினை எண்ணித்தான் வள்ளுவர், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் எனக் கூறி, இறைவன் தனது படைப்பில் சமதர்மத் தையே விழைந்தவன் என்ற உண்மையை வற்புறுத்திக் காட்டுகின்ருர், இவற்றையெல்லாம் எண்ணிய இந்த நூற்ருண்டின் விடுதலைக் கவிஞர் பாரதி, தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் - சகத்தினை அழித்திடுவோம்’ எனக் கூறுகின்ருர். இவ்வாறு, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சங்க காலம் தொடங்கி இருபதாம் நூற்ருண்டுவரையில் வாழ்ந்த தமிழ் நாட்டுப் புலவர்கள் அனைத்திலும் சமதர்ம உணர்ச்சி மக்கள் உள்ளத்தில் பரவ வேண்டும் என வற் புறுத்தியே வந்துள்ளனர். இங்கு ஒரு சில காட்டினேன். தமிழ் இலக்கியக் கடலுள் ஆழ்ந்து காணின் இவை போன்று ஆயிரக்கணக்கான மேற்கோள்களைக் காண லாம். எனவே, இச் சமதர்மக் கொள்கை தமிழனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/85&oldid=812587" இலிருந்து மீள்விக்கப்பட்டது