பக்கம்:கொய்த மலர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்கு வழி 87 காட்டியதை மெயில் இதழ் நன்கு எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறது. எண்ணித்துணிக கருமம்' என்பது அரசியல் அறிந்த வள்ளுவர் வாய்மொழி. ஆனல் எத்தனை திட்டங்கள் எண்ணி எண்ணி உருவாக்கப் பெறுகின்றன? ஏதோ அவசரத்தில், மற்றக் கட்சிகளின் பிரசார மறுப்புக்காகப் பல கோடி ரூபாய் செலவிட் டோம் என்று தேர்தல் கூட்டத்தில் பேசுவதற்கோ என கினைக்குமாறு, முன்பின் விளைவுகள் உணராது பல கோடித் திட்டங்கள் இட்டுவதால் பயன் என்ன? மெயில் இதழ் பல கோடி செலவிட்டும் பயனற்ற பல திட்டங் களை எடுத்துக்காட்டியுள்ளது-(13-11-59). அவற்றுள் ஒன்று துங்கபத்திரைத் திட்டம். எனவே எங்கோ உட்கார்ந்துகொண்டு காலம் இடம் அறியாது திட்டம் தீட்டிப் பணத்தை ஒதுக்கி வீணக்கி விட்டால் மட்டும் பயன் காண முடியுமா? இது விவசாயத்தில் மட்டுமன்று. ஒவ்வொரு துறைக்கும். கல்வி, கைத்தொழில், சமூகப் பணி அனைத்துக்கும்-பொருந்தியதேயாகும். திட்டம் திட்டப்பெறுமுன் அது பயன்படும் இடம், கால கிலே, மக்கள் உணர்வு, பிற இயல்புகள் அனைத்தும் எண்ணப் பட வேண்டும். அவ்வாறு இன்றித் திட்டம் தீட்டி விட்டுப் பயன் இல்லை என்ருல் என்ன காண முடியும்? கிற்க, விவசாயிகளுக்குச் செலவாகின்றது. பல கோடி என்று கூறும்போது மற்ருென்றையும் எண்ண வேண்டும். ஆண்டுதோறும் சட்டசபைகள் பட்ஜெட், கூட்டம் கூடிச் செலவாகும் தொகையை அரசாங்கம் கணித்து மத்திய மாநில ஆட்சிகளுக்கு ஜூலை ஆகஸ்டில் ஒப்படைக்கின்றன. பின் மாநில ஆட்சிகள் மாவட்டங் களுக்குப் பகிர்ந்து கொடுக்கப் பின்னும் இரண்டு மாதங்கள் ஆகின்றன. அவை உரியவருக்கு வேலை கொடுத்துத் தொடங்க ஜனவரி பிறந்துவிடும். வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/89&oldid=812595" இலிருந்து மீள்விக்கப்பட்டது