பக்கம்:கொய்த மலர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கொய்த மலர்கள் மார்ச்சு 31க்குள் முடியவேண்டும். எப்படி நடக்கும்? ஏதோ கடந்ததாகச் செய்து முடித்துக் காட்டுகிருர்கள். அதேைல பலவாறு பயனற்றுப் பொருள் கெடுகிறது. ஐம்பது, நூறு ஆண்டுகளுக்குமுன் கட்டிய சிறு பாலங்கள் அப்படியே கெடாதிருக்க, அண்மையில் கட்டிய பாலங். கள் சிறு வெள்ளத்திலும் சிதறுண்டு போவதைக் காண்கின்ருேம். எனவே இத்தகைய ஆக்கப் பணிகளுக்கு வேண்டிய பணத்தையும் பிற பொருள்களையும் குறைக் தது ஓராண்டு முன்னமேயே தந்து தொழிற்பட உதவ வேண்டும். எல்லாவற்றையும் விரைவில் செய்து கம் ஆட்சிநாளி லேயே நல்ல பெயர் வாங்கவேண்டும் என நினைப்பதில் தவறில்லை. அது மனித உள்ளத்தின் இயல்பு. ஆனல் அதற்காக அளவற்ற-தேவையில்லாத-பயன்படாதசரிவர ஆக்க இயலாத பல பணிகளை ஒரு சேர எடுக்கத் திட்டம் தீட்டுதல் முறையாகுமா? அதற்காக வெளி நாடுகளில் பல கோடிக் கடன் வாங்குவதும் மக்கள் மேல் த்ாங்க முடியாத வரிச்சுமையை ஏற்றுவதும், முறையோ? இப்படிச் சற்றுச் சிந்தித்தால் உண்மை விளங்கும். 900 கோடி ரூபாய் இதற்குள் அவர்கள் திட்ட வழி செலவழித்தது எங்குச் சென்றதோ?-என எண்ணித் தயங்க வேண்டியதில்லை. அரசாங்கம் அவ்வாறு பணம் பயனற்றுச் சென்ற விடத்தைக் கண்டுபிடித்து உற்றவ. ருக்குத் தண்டனை அளித்தால் ஓரளவு இனியாவது நேர்மையாகச் செயலாற்ற வழி உண்டு. நிற்க, திரு காமராசர் கூறியபடி சென்னையிலும் பிற விடங்களிலும் அரசாங்கம் பல்வேறு வகையில் உதவி, குறைந்த வட்டிக்குப் பணம் தந்து, வீடற்றவருக்கு வீடு கட்டித் தருகிறது. ஆல்ை அவர்கள் வாடகைக்கு விட்டும், விற்றும் பொருள் சம்பாதிக்கிரு.ர்கள். இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/90&oldid=812599" இலிருந்து மீள்விக்கப்பட்டது