பக்கம்:கொய்த மலர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்கு வழி 89 முதல் அமைச்சரே அறிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? சென்னையில் கிலேத்து வாழ்வோர் பலர் வீடற்று இருக்கும் நிலையில் இங்கு வாழாதவருக்கு என் வீடு ஒதுக்கவேண்டும்? பல ஆண்டுகளாக நகராண்மைக் கழகத்தில் பணி செய்யும் பலர் வீடு வேண்டும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்க, நேற்று வந்து நாளே செல்லும் சிலருக்கு நகராண்மைக் கழகத்தார் வீடுகளை ஏன் ஒதுக்க வேண்டும்? இவ்வாறு ஒதுக்கினல் அவர்கள் விற்று அல்லது வாடகைக்கு விட்டுச் செல்லாது வேறு என்ன செய்வர்? அவர்கள் அவ்வாறு செய்யும்போது கடவடிக்கை எடுத்துத் தடுத்துத் தண்டித்தால் கிலே திருந்தாதா? அறிந்தும் ஏன் செய்யவில்லை? - பம்பாயில் இந்தக் கூட்டுறவு முறையில் வீடுகட்டும் திட்டங்கள் உள. அதில் ஒருவரும் இம்மாதிரி விற்கவோ, வாடகைக்கு விடவோ முடியாது. அவர்கள் தமக்குத் தேவை இல்லையாயின் வீட்டைக் கொடுத்த கூட்டுறவுச் சங்கத்திடமே ஒப்படைக்க வேண்டுமே தவிர, வேறு ஒன்றும் செய்ய இயலாது. இந்த முறையை இங்கே செயலாற்றிஞ்ல் என்ன? எத்தனையோ குறைகள் ஒழியுமே! உணவு முறையில் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள் நாளுக்கு நாள் மாறுபடுவதைக் காண் கிருேம். காட்டு கிலே அறிந்து தேவை அறிந்து சென்னை மாநிலம் தனக்கெனத் தனி உணவு மண்டலம் கேட்டும் மத்திய அரசாங்கம் என் மறுத்தது? இங்குள்ள கிலே இவர்களுக்குத் தானே விளங்கும்? எங்கோ தில்லியில் இருந்துகொண்டு, மற்ற மாநிலத்தாருக்கு உதவ வேண் டும் என்பதற்காக இவர்கள் வேண்டுகோளை மறுக்க லாமா? அதல்ை இவர்கள் கெல்லைக் கொள்முதல் செய் வதும் இன்றேல் விடுவதும் என்று தம் விருப்பம்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/91&oldid=812601" இலிருந்து மீள்விக்கப்பட்டது