பக்கம்:கொய்த மலர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கொய்த மலர்கள் செய்து மக்கள் வாழ்வை மாருட வைக்கிருர்கள். கிற்க. 'அரிசி, புளி, மிளகாய் முதலியவற்றின் விலைகள் உயர் கிறதே; தடுக்க வழியில்லையா? என மக்கள் அலறும் போது அது நாட்டுப் பொருளாதார உயர்ச்சியைக் காட்டுகிறது என்றும், விலை ஏறினல் அவற்றை வாங்காது விட்டு விடுங்கள் என்றும் பொறுப்புள்ள வர்கள் பேசுவது பொருந்துமா? அரிசி, புளி, மிளகாயை வாங்காது விட்டு வாடி இறப்பதா? இதை அரசாங்கம் விரும்புகிறதா? உரிய நடவடிக்கை எடுத்து விலை ஏற்றத் தைத் தடுக்க வேண்டாமா? இவ்வாறு ஒவ்வொரு துறையையும் எண்ணிப் பார்க்கலாம். அரசாங்கம் வருமானத்தை அதிகமாக்கச் சென்னைப் ‘பஸ் போக்குவரத்தை எடுத்துக்கொண்டது. ஆல்ை இன்றைய கணக்குப்படி வருமானம் என்ன? தனியார் காலத்தில் வருமான வரியாக மத்திய அரசாங் கத்துக்கும், பிறவரிகளாக மாநில அரசாங்கத்துக்கும் கொடுத்த அந்த வருமானங்களோடு இன்றைய வருமா னத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். அன்றித் தான் மேற்கொண்டதைத் திறம்பட நடத்திற்று என்ற பெயரும் இல்லையே! கல்வித் துறையிலும் எத்தனையோ மாற்றங்களும் மாருட்டங்களும் உள்ளன. இளம் குழந்தை முதல் கல்லூரி மாணவர் வரையில் இந்த அரசாங்கத் திட்டங் களாலும் பல்கலைக் கழகத் திட்டங்களாலும் பாதிக்கப் பெறுகின்றனர். அவ்வத்துறையில் வல்லவர்கள் அதில் அதில் உள்ள குறைகளைக் கண்டு காட்டித் "திருந்துங்கள் திருந்துங்கள்' என்று கூறினலும் கேட்பது கிடையாது. ஒவ்வொரு துறையிலும் இப்படி அவ்வத்துறையில் வல்ல வர் சொல் கேளாது தம் விருப்பம்போல் திட்டம் தீட்டிக் கடன் வாங்கிக் கோடிக் கணக்கில் செலவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/92&oldid=812603" இலிருந்து மீள்விக்கப்பட்டது