பக்கம்:கொய்த மலர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்கு வழி 91 மட்டும் பயன் காண முடியுமா? ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணி எண்ணி மெள்ள மெள்ளச் செயல்பட வழிதுறை காணவேண்டும். எதிலும் அவசரம் அல்லலேயே விளக்கும். இரண்டுபட்ட உலகில் காட்டைத் தம் வழி இழுக்க யாரும் கோடி கோடி யாகக் கடன் கொடுக்க வருவார்கள். ஆனல் அதைக் கொண்டு நம் நாட்டைத் திறம்படாத திட்டத்தால் சீர் குலைக்கலாகாது. ஆகவே ஒன்றைத் திட்டமிடுமுன் எண்ணுக! 'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு." என்ற குறளைத் தான் இங்கே என்னல் கூற முடிகிறது. ஆம் தீட்டுமுன்-திட்டம் தீட்டுமுன்-எண்ணுங்கள். எண்ணிப் பின் செயல் படுங்கள். பிறகு யாரையும் குறைகூற வழியிருக்காது. வெற்றிக்கு அதுவே வழி ஆம்! எண்ணிச் செயலாற்றுவதே வெற்றிக்கு வழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/93&oldid=812605" இலிருந்து மீள்விக்கப்பட்டது