பக்கம்:கொய்த மலர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. எல்லைப் போராட்டம்’ - பல ஆண்டுகளுக்கு முன் என்னேயே கான் நன்கு அறிந்து கொள்ளாத காலம். கிராமத்தில் எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். எனது அன்னையார் பக்கத்தில் கின்று கொண்டிருந்தார்கள், திடீரென்று நான்கைந்து நாய்கள் குரைத்துப் பேரொலி எழுப்பின. நான் என்ன என்று எட்டிப் பார்த்தேன். தூரத்தில் எங்கள் தெருவை நோக்கி ஒரு நாய் மெல்ல வாலக் குழைத்துக்கொண்டே நகர்ந்து வந்தது. ஆனல் தெருவிலிருந்த நான்கைந்து காய்கள் அதை நோக்கியே குரைத்து வேகமாக ஓடின. அந்தப் புது காய் சிறிது நேரம் கின்றது. பிறகு திரும்பி ஓட்டம் எடுத்தது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அன்னேயின் முகம் நோக்கினேன். அவர்கள் சொன்னர்கள். "இந்த நாய்களெல்லாம் நம் தெருவிலேயே வாழ் கின்றன. அந்தப் புதுநாய் எங்கோ பக்கத்துத் தெரு விலிருந்து புதிதாக இங்கு வரப் பார்த்தது. அதை அறிந்த இவைகள் குரைத்துத் திரும்ப ஒடும்படி செய்து விட்டன. ஆமாம்! இத் தெரு, இந்த காய்களுக்குச் சொந்த எல்லை. இங்கு காமெல்லாம் இடும் எச்சில் இலை கள் முதலியவைகளை இவையே தின்னும். இன்று வேறு புதிய நாய் வரவே, இவை தம் எல்லையில் அதை விடாது துரத்தின. பாவம் அதுவும் தனியாக ஒன்றும் செய்ய முடியாமையால் ஓடிவிட்டது' என்று கூறிய அன்னை யின் சொல்லைக் கேட்ட எனக்கு அப்போது அதிகமாக ஒன்றும் விளங்காவிடினும், அது ஒரு எல்லைப் போராட்டம்

  • நக்கீரன் பொங்கல் மலர், ஜனவரி 60
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/94&oldid=812607" இலிருந்து மீள்விக்கப்பட்டது