பக்கம்:கொய்த மலர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைப் போராட்டம் 93 என்பது மட்டும் விளங்கிற்று. தமக்கு உரிமையான தெரு எல்லையில் புதிதாக வேறு ஒரு நாயைவிட எனது தெரு காய்கள் ஒப்பவில்லை என்பது புரிந்தது. எனக்கு வயது ஆக ஆகப் புதுப்புது அனுபவங்கள் பலப்பல உண்மைகளை விளக்கின. நாய்கள் மட்டும் தாம் எல்லேக்கோடு அமைத்துப் போராட்டம் கடத்த வில்லை; மனிதன் அவற்றினும் மேலாக எல்லைப் போராட் டத்தில் முன் கிற்கின்ருன் என்பது விளங்கிற்று. எங்கள் ஊரில் கால்வாய் வழிதான் நிலத்துக்குப் பாசனம் செய்ய முடியும். ஏரி கிடையாது. அக் கால் வாயை கிலத்துக்குரியவர்கள் முறைப்படி பங்கு போட்டுக் கொண்டு அவரவருக்கு உரிய எல்லையில் கின்று தோண்டி ஆற்று ைேரக் கொண்டு வருவார்கள். இது நெடுங் காலமாக நடைபெற்று வந்த நிகழ்ச்சி. ஆனல் ஒரு நாள் ஒருவர் திடீரென்று மற்றவர் எல்லையில் புகுந்து தான் அங்கேதான் தோண்ட முடியும் என்று மாறு பட்டார். ஊரில் அனைவரும் தடுத்தார்கள்; கேட்கவில்லை. கடைசியில் அன்றுதொட்டு இன்றுவரை கால்வாயில் சரி யாக வேலை நடைபெருது பயிரிடும் தொழிலும் பெருத்த இழப்பிலேயே நடைபெறுகிறது. ஊரில் அண்ணன் தம்பி இருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். எப்படியோ இருவரும் பிரிக்க விரும் பிய "நல்லவர்' களால் பிரிக்கப்பட்டனர். வீட்டை இருகூருக்கினர். இடையில் உள்ள ஒரு சுவர் பற்றிய எல்லைத் தொல்லே எழுந்தது. இருவரில் யாரும் தன் உடன் பிறந்தவருக்கு விட்டுக் கொடுக்கலாம். அதுதான் இல்லை, அதனல் நீதி மன்றம் ஏறினர். ஒவ்வொருவரும் ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் இழந்தனர். கடைசியில் எங்கோ இருந்த நீதி உரைக்கும் நடுவர் வாய் மொழிக்குக் கட்டுண்டனர். உடன் பிறந்தவர்க்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/95&oldid=812609" இலிருந்து மீள்விக்கப்பட்டது