பக்கம்:கொய்த மலர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லப் போராட்டம் 97." விஞ்ஞானத்தைக் கண்டு பிடிப்பது என்று பொருள் கொள்ளலாமா? எப்படி முடியும்? வள்ளுவர் 'அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யாவிடல்' எனக் கூறுகின்ருரே. எனவே, உண்மை அறிவான மற்றவரை வாழவைக்கும் பண்பு நாட்டிலும் உலகிலும் வாழவில்லை. அதேைலயே இந்த எல்லேப் போராட்டங் கள் வளர்கின்றன. இதை நீக்க வழியில்லையா? தமிழன் நெடுங்காலத்துக்கு முன்பே இந்த எல்லேப் போராட்டத்துக்கும் அதன் வழி அமையும் பிற போராட் டங்களுக்கும் வழி கண்டுவிட்டான். அதுவே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தரவாரா என்ற உண்மையாகும். ஒரே உலகம் அமைப்போம் என்று உதட்டளவில் பேசிவிட்டு, உள்ளத்தில் எல்லை கட்டும் இந்த எல்லைப் போராட்டத்துக்கு ஒரே மருந்து இந்தக் கணியன் பூங்குன்றன் அடிகள்தாம். ஆனல் உலக வல்லரசுகள் இந்த உண்மையை ஏற்குமா? நான் முதலில் கூறிய அந்தத் தெரு நாயாவது பிறவற்றின் குரைப்பொலி: கேட்டுப் பின் திரும்பி ஓடிற்று. இன்றைய வல்லரசுகள் எது சரியோ அதை உணர்ந்து தத்தம் எல்லேயில் பின் வாங்கி அமைவார்களானல், போர் இல்லாமலாவது தடுக்கலாம். ஆனல் அப்படிச் செய்யாது ஒன்றற்: கொன்று முட்டிக்கொள்ளும் கிலே ஏற்பட்டால் என் வைது? - தாயுமானவர், ஆசைக் கோரளவில்லை அகில மெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆண செல்லவே நினைவர்" என, மக்கள் இனத்தை எண்ணி இரங்கிப் பாடுகிருர், இன்று கடல் தாண்டி விண்மீதும் ஆணே செலுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/99&oldid=812617" இலிருந்து மீள்விக்கப்பட்டது