பக்கம்:கொய்த மலர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 98 கொய்த மலர்கள் முனைந்து விட்டனர்! இந்த ஆசையெல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்' என்கிருர் அவர். ஆம்! இதற்காக இத்தனை எல்லைப் போராட்டமா? தம் காடு வாழப் பிற நாட்டைச் சுரண்டி-நசுக்கி-ஆண செலுத்துவதா? அதற்கு நாகரிகம் என்று பெயரா? இந்தக் கொடுமை நீங்கத் தாயுமானவர் காட்டும் வழி உள்ளதே போதும் என்ற உணர்வுதான். இந்தத் தமிழனுடைய உணர்வு வல்லரசுகள் உள்ளத்தில் முளைக்க வேண்டும்; முளேக்குமா? தமிழன் இந்த உணர்வோடு செல்விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருக்கும் பண்பில் தன் காட்டில் தான் வாடினும் மற்றவர்களே யெல்லாம் வருக என வரவேற்று, இன்றும் அவர்களை நன்கு வாழவிடுகின்ருன். ஆல்ை இந்தியாவின் பிற பகுதிகளிலோ உலக அரங் கிலோ இந்த வேறுபாட்டு உணர்வு மறையவில்லை என்பதை அன்ருட நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இந்த எல்லைப் போராட்டம், தனி மனிதனுக்காயினும் சரி. வல்லரசுகளுக்காயினும் சரி-என்று இல்லையோ அன்று தான் நாடும் உலகும் நாமும் வாழ்வோம். அதற்கு வழி காட்டக் கணியன் பூங்குன்றன் நேரில்தான் வர வேண்டும் போலும் தாயுமானவர் மறுபடியும் தோன்றத் .தான் வேண்டும் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/100&oldid=812302" இலிருந்து மீள்விக்கப்பட்டது