பக்கம்:கொய்த மலர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0. எல்லாரும் உவப்பது* உலகில் எல்லாரும் உவக்கும் அல்லது விரும்பும் காரியத்தைச் செய்வது ஒருவராலும் இயலாது என அனை வரும் கூறுகின்றனர். ஒரு செயலைச் செய்தால் சிலர் மகிழ் வர்; சிலர் வெறுப்பர். ஆனல் எல்லாரும் உவக்கும் செயல் செய்தல் அரிதே. ஆயினும் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார் சங்ககாலப் புலவர் ஒருவர். நரிவெரூஉத்தலே யார் என்ற அப்புலவர் அந்த எல்லாரும் உவக்கும் செயலைக் காட்டுகின்ருர். அது மிக எளிதான வழிதான். என்ருலும் இன்று மக்கள் அச்செயல் மேற்கொள்ளத் தயங்குகின்றனர். மனிதன் தன் நிலைகெட்டு விலங்காகிக்கொண்டு வரும் காகரிக நாள் இது. மனிதனுக்கு உரிய பண்பாடு அனேத் தும் ஏட்டிலே இருக்கும் அளவோடு கின்று விட்டன. மனிதருள் சிலர் மற்றவர் பெறும் துன்பங் கண்டு உளம் மகிழும் அளவிற்கு முன்னேறி விட்டார்கள் என்று :சொல்லலாம். மனிதப்பிறவி பிற உயிர்கள் அனைத்திலும் மேம்பட்ட பிறவி என்பார்கள். அதற்குக் காரணம் அவன் நல்லதன் நலனும் தீயதன் தீமையையும் பகுத் தறிந்து தான் இன்புறுவது உலகின்புறக் கண்டு வாழ் வாங்கு வாழ்கின்ருன் என்பதே யாகும். ஆயினும், இன்றைய மனிதன் அந்த கிலேயில் இல்லை. மேடைமேல் விண் முட்டப் பேசியும், ஏடுகளில் பக்கம் பக்கமாக அற நெறி பற்றி எழுதியும் வாழும் மனித சமுதாயம், வாழும் வாழ்க்கையில் எவ்வளவு முறை வழுக்கி வீழ்கிறது! காரணம் உள்ளத்துள்ளேயே மனிதப் பண்பாடு மறைக்

  • மலேயா மலர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/101&oldid=812304" இலிருந்து மீள்விக்கப்பட்டது