பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
103

எதிர்பாராமல் போலீசார் வந்ததைக் கண்டு குள்ளனின் ஆள்கள் திகைத்து அப்படியே நின்றுவிட்டனர். அவர்களை யெல்லாம் போலீஸார் கைது செய்தனர். இனிமேல் தப்பிக்க முடியாது என்று குள்ளனுக்குத் தோன்றிவிட்டது. அதனால் அவன் போலீஸாரிடம் அகப்படுவதைவிட இறப்பதே நல்ல தென்று தனது துப்பாக்கியைச் சட்டென்று எடுத்து, தன்னையே சுட்டுக்கொள்ளப் போனான்.

கொல்லிமலைக் குள்ளன்.pdf

அதுவரையிலும் ஜின்கா அவனையே கவனித்துக்கொண்டிருந்தது. அவன் துப்பாக்கியை எடுப்பதைப் பார்த்ததும், அதற்கு என்னவோ சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. சற்று தூரத்தில் இருந்த தங்கமணியை அவன் சுட்டுவிடுவானோ என்று நினைத்ததோ என்னவோ, அது சட்டென்று குள்ளனின் வலக் கையின் மேலே பாய்ந்து, பலமாகக் கடித்தது. குள்ளன் கையை வேகமாக உதறி ஜின்காவைத் தரையில் தள்ளினான். பிறகு, அதைத் தன் கைத்துப்பாக்கியால் சுட்டான்.

ஜின்கா வீறிட்டு அலறிக்கொண்டு தாவிப் பாய்ந்து ஓடிற்று. அதன் உடம்பெல்லாம் ஒரே ரத்த மயம்! தூரத்தில் சென்ற பிறகும் அலறல் ஓயவில்லை. குள்ளன் இரண்டாம் முறை சுடு