பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

கொல்லிமலைக் குள்ளன்.pdf

தனர். அங்கே ஓரிடத்திலே உயர்ந்திருந்த ஒரு மலைப்பகுதியினின்று சிறிய அருவியொன்று சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டு விழுந்துகொண்டிருந்தது. அதற்கு எதிரிலே ஒரு பாறை அருவியை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பறையின் அடியிலே படுப்பதற்கு வசதியாக ஒதுக்கிடமும் நிழலும் இருந்தன. கண்ணகி அங்கே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஜின்காவும் பக்கத்திலே படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. கண்ணகியின் தலைமாட்டிலே நாவற் பழங்கள் குவியலாகக் கிடந்தன.

உடனே எல்லாருக்கும் நிலைமை விளங்கிவிட்டது. குகையை விட்டு வெளியே வந்த கண்ணகிக்கு ஜின்கா ஒவ்வொரு நாவல் மரமாகத் தாவி நாவற்பழம் போட்டிருக் கிறது. அவற்றையெல்லாம் தின்றுகொண்டும், கைக்குட்டையிலே சேர்த்து வைத்துக்கொண்டும் கண்ணகி கொஞ்சம் கொஞ்சமாக அதுவரையிலும் வந்துவிட்டாள் பிறகு. நீர் வீழ்ச்சியைக் கண்டதும் அதைப் பார்த்துக்கொண்டே பாறையின் அடியில் உட்கார்ந்து பழங்களைத் தின்றுகொண்டிருந்