109
படை நடந்த இடம் இதுவாம்; பண்புக்குப் பெட்டகமாம்; பார்புகழ வாழ்ந்தனராம்; பல நூலும் கண்டனராம்! அந்த இடம் தனக்கே, நாம் உரியர் என்பதனை இன்று அறிந்திட்டோம், இனி ஏற்பது இகழ்ச்சி அல்ல எனக் கூறித், தந்தது தின்று தெந்தினம்பாடித், தருக்கரின் தாளில் தலையினை வைத்து இழுக்கினைத் தேடிக்கொண்டிடப் போமோ! செச்சே! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று நவின்றாரே, கவிஞர்பிரான். நமக்கும் நற்பாடம், அக்கவிதைதாராதோ!! 'நாமிக்கும் நாடு நமது' என்பது கண்டோம் என்ற கவிதை, நமக்கும் சேர்த்தன்றோ! ஏன் இனி நமக்கு இச்சகம் பேசிப் பிழைத்திடும் பிச்சை வாழ்வு! ஏற்கோம் இனி இழிநிலை—எடுப்போம் புதுமுயற்சி-கட்டி முடிப்போம் எமதிடம்- என்று சூளுரைத்தார். எதிர்ப்பட்டோர்கள் இடி இடியெனச் சிரித்து, "கண்டீரோ பெருவீரர்! அறிந்தீரோ இவர் தீரம்!! குன்று பெயர்த்தெடுத்து செண்டு ஆக்கப் போகின்றார்! நின்றிடுக என்று கூறி, கடல் அலையைத் தடுத்து நிறுத்தப்போகின்றார்! மணலெல்லாம் குவித்தெடுப்பார், மரகதக் குவியலாக்கிடுவார்! நத்தையில் முத்தெடுப்பார், தாழையில் வாழை காண்பார்; தந்தம் பெற்றிடுவார் தத்திடும் அணில் அதனில்; ஏ! அப்பா! இவர் ஆற்றல் எவர்க்குண்டு; கண்டுரைமின்!" — என்று எவரெவரோ ஏளனம் பேசி நின்றார். பணிபுரியும் போக்கினரோ நீராடி நீந்துகையில், நீர் புரளும் மீனினம் கொத்திடும் விதமாக இவர் ஏதோ சத்தமிட்டுக் கிடக்கின்றார், நமக்கென்ன இது பற்றிக் கவலை என்று கூறுவதுபோலாகித் தூற்றுவோர் தூற்றட்டும் புழுதிவாரி வீசுவோர் வீசட்டும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே; அவர்க்குரிய ஆற்றலை அவர் காட்டி நிற்கட்டும்; நம் கடமை நாமறிந்து நமது இல்லம் அமைத்திடும் ஓர் நற்பணியில் இறங்கிடுவோம்; வண்டாடும் சோலையிலே வண்ணமயில் ஆடுகையில், வளைந்த வால்காட்டி தாவிடு-