உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

சொல்லமாட்டார்கள்—நவஇந்தியாவும்—சக்தியும் விளக்கை அணைத்துவிடுவார்களே ! இருட்டிலா உழல்வது !

நான் என்று தம்மை நேருவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது, மேலோன் என்பதற்காக அன்று; உங்கள் இனத்தவன் என்ற உரிமையால், நான் கூறுகிறேன் என்பதாகும். நேரு பெரியவர், பேரறிவாளர்; எனினும் வேறு இனத்தவர் ! எனவே தான், அவர் பேச்சை ஏற்க மறுத்து வந்தீர் ! இப்போதோ, சொல்வது நான்! சொந்த இனத்தான்! அந்நியன் அல்ல! எனவே நான் சொல்வது கேண்மின் என்ற பொருள்கொள்வது என்றால், அப்போது, ஒரு அடிப்படை உண்மையை, நாட்டுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டும். திராவிடநாடு பகற்கனவு என இவர்களும் பேசுகின்றனர் ; நேருவும் பேசுகிறார் ; எனினும் இவர்கள் இனம் வேறு—நேரு இனம் வேறு.

இந்த உண்மையைக் கூறும் துணிவாவது ஏற்பட வேண்டும்; அல்லது இந்தியா, இந்தியன் என்ற உணர்வு தான் உண்மையானது, தேவையானது; கொள்ள வேண்டியது என்று கூறும் நாணயமாவது இருக்க வேண்டும் ; இரண்டும் இன்றி, நான் கூறுகிறேன் திராவிட நாடு வேண்டாமென்று, என் பேச்சைக் கேளுங்கள் ; நேரு இதனைச் சொன்னபோது ஏற்கமறுத்தீர்கள்—மறுத்தோம், தவறில்லை, ஏனெனில், நேரு எவ்வளவு பெரியவராயினும் நம்மவர் அல்ல, திராவிடர் அல்ல ! நானோ திராவிடன் ! எனவே, என் சொல் கேண்மின் !! என்று கூறுவது வெறும் கேலிக் கூத்தாகும்.

"ஐயன் அழைக்கின்றார் ; அகிலம் அறிந்துள்ள ஆற்றல் மிக்கோன் அழைக்கின்றார் ! மேதினி கொண்டுள்ள மெய்யெல்லாம் உணர்ந்தவர் காண் ! வரலாறு பலவும் கற்றறிந்த பேரறிவாளர் ! அவர் காணா நாடில்லை ! அவர் உரை கேளா-