118
திராவிடநாடு பகற்கனவு என்றும், பிரிந்துபோக வேண்டியதில்லை என்றும், பிரியும் உரிமைமட்டும் சட்டப்படி கேட்டுப் பெற்றுக்கொண்டால் போதுமென்றும், வடநாட்டுடன் ஒட்டி வாழலாம், உறவு கொண்டாடலாமென்றும், வடநாடு கண்டு அச்சம் ஏன் கொள்ளவேண்டும், வடநாடு நரகலோகமுமல்ல; வடவர் யமகிங்கரருமல்லவென்றும் இத்துணை வேகமாக அவர்தம் இந்திய பக்தி முற்றி வருகிற நிலை காணும்போது, இனி ஒரு புதிய சட்டமே செய்து நாட்டுப் பிரிவினை கேட்போரைக் கடுஞ்சிறையில் தள்ள வேண்டும், அப்போதுதான் இந்திய ஒற்றுமை நிலைக்கும் என்று, நேரு பண்டிதருக்கே யோசனை கூறக்கூடும் என்றன்றோ தோன்றுகிறது.
தம்பி! இதனைக் கவனித்தாயா? திராவிடநாடு கூடாது என்பதற்கு இந்திய பக்தியை இன்று பெற்றுவிட்டவர்கள், புதிய காரணம் எதுவும் கூறினாரில்லை. கூறாததுடன் ஏற்கனவே நேரு போன்றார் காட்டிய காரணங்கள் தமது மனதைப் பெரிதும் கவர்ந்து தம்மை இந்நிலைக்குக் கொண்டு வந்தது என்றும் கூறாமல், நேருபண்டிதரின் பேச்சைக் கேட்க மறுத்தவர்களும், இன்று தனது பேச்சைக் கேட்பர், திருந்துவர், ஒப்புதல் அளிப்பர், என்று எண்ணுகின்றனர். எத்துணைத் துணிவு இருத்தல் வேண்டும், அப்படி எண்ணிட !
"நான்" சொல்கிறேன் கேளுங்கள்!—என்று கூறும் போது, அந்த 'நான்' என்பதற்குப் பொருள் யாது கொள்வதோ? நான், நேருவினும் பெரிய நிலைபெற்றோன்; நேரு காட்ட இயலாத காரணம் காட்டவல்லோன் ; நேருவுக்கு இல்லை உமது மனம் மாற்றும் ஆற்றல், நான் கொண்டுள்ளேன் என்று பொருளோ—செச்சே ! இப்போது அப்படிச்