121
வோம் ஒரு கூட்டம் என்றன்றோ கொண்டுள்ளார்; புத்தம் புதுப்போக்கு.
தம்பி! தமிழ்நாடு மட்டும்போதும்; அதுமட்டுமாகிலும் பிரிந்து தனிநாடு ஆகிவிடட்டும் என்ற கொள்கையினை, ஆதித்தனார் அளிக்கும் அறிவுரையால் கொள்கின்றார் என்றே வைத்துக் கொள்வோம், வாத முறைக்காக, என்ன பலன் அதனால் ? எவ்வகையில் உதவி செய்யும் ?
திராவிடநாடு கேட்டால் மட்டும், வடவர் சீறுவர்; தமிழ்நாடு கேட்டால், வாரி வழங்குவரோ ? கேள் கொடுக்கப்படும். தமிழ்நாடு—திராவிடநாடு அல்ல என்று நேரு பெருமகனார் செப்பினரோ, என்றேனும். அவருக்கு ஒரே நோக்கம்—பாரதம் ஒன்று என்பதே அவர் திட்டம். இந்நிலையில், திராவிடநாடு என்ற திட்டத்தைத் தமிழ்நாடு என்று மாற்றிக்கொள்வதனால், வந்திடும் வசதி என்ன? காரியம் எளிதாகும் என்பரேல், காட்டட்டும் காரணம்!
இதனைத்தான் எழுதிக் கேட்கின்றார் ஏற்காடுதனில் இருந்து, தன்மான இயக்கம் கண்ட நாள் முதலாய் நம்மோடு இருந்துவரும் தகைமையாளர்—திருவொற்றியூர் சண்முகனார்.
மற்றொன்றும் கேட்கின்றார் நம் நண்பர்.
திராவிடநாடு கேட்கும்போது கொதித்து எழும் காங்கிரசார், தமிழ்நாடு என்று அளவைக் குறைத்துக் கொள்ளும் போது மகிழ்ச்சி கொள்கின்றனரோ ? அங்ஙனமாயின், தமிழ்நாடு தனிநாடு ஆவதற்குக் காங்கிரசார் இசைவரோ? இசைவதாயின், பெறலாமே. பெற்று, காமராசரே முதலமைச்சராக வீற்றிருக்கலாமே—என்று கூறுகின்றார். உண்மைதான் தம்பி! காங்கிரசார் என்னவோ, திராவிட நாடுதான் எட்டி, தமிழ்நாடு இனிப்பு என்று எண்ணுவது போலவும், ஆகவே, தமிழ்நாடு என்று நாம் திட்டத்தை