உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மாற்றிக்கொண்டால், வெற்றி நிச்சயம் என்று கொள்வது போலவும் அன்றோ பேசுகின்றார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இன்று திராவிட நாடு கோரிக்கை வலிவு பெற்று வருகிறது; இந்தியத் துணைக் கண்டத்துக்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப்போய் விட்டது; வெளிநாடுகளிளெல்லாம் 'திராவிடநாடு' கிளர்ச்சி பற்றியும் எழுச்சிபற்றியும் வெகுவாகப் பரவிவிட்டது; எனவே, முதலில் அதனை உடைத்துவிடவேண்டும்; அதற்கு ஒரு ஊனம் ஏற்படுத்த ஒரே அடியாக, ஏக இந்தியா—பாரதம்—என்று பேசுவதுமட்டும் போதாது—திராவிடம் என்று எண்ணம் கொண்டோர்களிடத்திலேயே, ஒரு பேதத்தை, பிளவை மூட்டிவிட்டு திராவிடம் வேண்டாம், தமிழகம் போதும் என்று பேசவைத்து, அவ்விதம் பேசும் போதும் தமிழகத்தின் தொன்மை தனித் தன்மை; வடவரிடம் சிக்கியதால் வந்த சீரழிவு என்பன குறித்து அதிகம் பேசாமல், அந்தச் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டில்லி அரசின் போக்கைத் தாக்காமல், திராவிடம் என்று பேசுவேரைத் தாக்கியும், திராவிடநாடு எனும் திட்டத்தைக் கண்டித்தும், அந்தத் திட்டத்துக்குப் பேராதரவு பெற்று அளித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து ஏசியும் பூசலைக் கிளப்பியும், பகை கக்கியும் படிப்படியாகப் பிரிவினைக் கொள்கையையே அழித்து ஒழிப்பது என்பது, அவர்கள் திட்டம். எனவேதான், தம்பி! திராவிடம் பகற்கனவு; திராவிட முன்னேற்றக் கழகம் கேவலமானவர்களின் கூடாரம்; சுயநலமிகள் கொட்டமடிக்கும் இடம்; அறிவிலிகளின் அரங்கம் என்ற இத்தகைய பேச்சுக்களுக்கு காங்கிரஸ் ஏடுகள் இத்தனை முன்னிடம் கொடுத்து உசுப்பி விடுகின்றன. இது பழைய வித்தைதான்; இதிலே பழக்கமும் பயிற்சியும் அதிகம் இருப்பதால், அதனை மும்முரமாகச் செய்துவருகின்றனர். புதிய கட்சியினர், "இவ்-