124
பகற்கனவு என்றீர்—உமது 'தமிழ்நாடும்' அஃதேதான் ! ஏனோ இதனை நீவிர் அறிந்திடாது இருக்கின்றீர், விட்டிடுவீர் வீண்வேலை! விலைபோட்டுக்கூட வாங்கவேண்டாம் ! கதராடை, புத்தம் புதிய ஆடை தருகின்றோம். புறப்படுவீர். பொன் அவிர் மேனியான், இந்தப் புவிக்குள்ள தலைவர்களுள், மாணிக்கம் போன்ற மதிப்புடையான்; மாமேதை நேருவிடம் மண்டியிட்டுச் சேவைசெய்ய!"—என்றல்லவோ கூறுவார்கள். இஃது அவர்களை இன்று பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியுமே! ஊரறிந்த இரகசியமல்லவோ இது.
தம்பி! நினைவிலிருக்கிறதா, சில ஆண்டுகளுக்கு முன்பு, ம. பொ. சி. அவர்கள், திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்திவந்த காதை ! ஊரூருக்கும்! நாட்டுப் பிரிவினையை எதிர்க்க, தடுக்க, ஏக இந்தியா எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் காங்கிரசுக்கு இல்லாத பலமும் வசதியும், ம. பொ. சி. அவர்களுக்கு உண்டா? இல்லை! என்றாலும், அவர் கிளம்பினார். கண்டோமே! திராவிடம் என்ற சொல்லாராய்ச்சியிலிருந்து தொடங்கி, கழகத் தோழர்களுக்கு (விலகியவர்களும் இங்கு இருந்த போதுதான்!) 'விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்ற விநோதப்பட்டம் சூட்டும் வரையில் பேசினர். ஏன் செய்தார் அந்த எதிர்ப்பு? தார்கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்த போது மண்ணெண்ணெய் ஊற்றி, தாரைக் கழுவிடத்தமது கழகத்தோரை அனுப்பிவைத்தார். வடநாட்டுக் கடைகள் முன் பெரியாரின் தொண்டர்கள் மறியல் செய்த போது, இவரது கழகத் தொண்டர்கள் எதிர் மறியல் நடத்தினர். இவைகளுக்கு, இன்று விலகியோர் பெறுகின்ற அளவிலும் வகையினும், விளம்பரம், காங்கிரஸ் ஏடுகளில் வெளிவந்தன, அறிவாயல்லவா? ம. பொ. சி.யின் தேசபக்தி, இலக்கிய மேதாவித்தனம் ஆகியவைகளைப் பாராட்-