17
என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார். என்றுதானே சொல்லுவார்கள் !!
இந்தவிதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ, மற்றவர்களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில்,
"சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை கம்யூனிஸ்டு கட்சிக்கும் அந்த நிலை ஏற்பட்டது. ஆனால், சட்டசபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்ட தொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்த தில்லை." என்று குறிப்பிட்டார்.
சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார்.
"சட்டமன்றத்தில், தி. மு. கழகத்தினர் எதையும் சாதித்துவிடவில்லை யெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள் சுற்றுப் பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்."
இப்படிப்பட்ட விளக்கம்—பாராட்டுதல்—பல்வேறு ஊர்களிலே உள்ளவர்களும், கேட்கட்டும் என்று வழங்கிவந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன்—தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்தத்