18
தி. மு. க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், நல்லபடிதான் பணியாற்றுகிறார்கள் என்று, கேட்போர் பெருமைப்படத் தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும், அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக்கொண்டு திருவண்ணாமலைத் தோழர் ப. உ. சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பதுபற்றிக் கண்டனம் தெரிவித்த துணச்சலையும், பாராட்டிப் பேசியதை இவ்வளவு கேட்டான பிறகு, இப்போது அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்று பேசினால், என்ன செய்வது ! சிரிக்கத்தான் தோன்றுகிறது !!
சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாதிலும் பெற, முயற்சி எடுத்துக்கொண்டிருந்திருப்பேன். முயற்சி எடுத்துக்கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம் ! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால், பாராட்டுதலை அல்லவா வழங்கிக்கொண்டிருந்தார் !! நாங்கள் சட்டசபையில் சரிவர வேலை செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார்—பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி ! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு, தைரியம் ஏற்பட்டதே எப்படி என்று தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர், அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன் ! கேட்டால் இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூடமூட்டாது.
"கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித்திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ர-