19
மணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால் நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக்காரணம், அண்ணாந்துரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால் தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக்கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்."
தம்பி ! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால் அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ்நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக்கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மைத் தோழர் சம்பத மகிழச் செய்தார் ; இப்போது, நாம் சட்டசபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர் சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்துகொண்டிருப்பது ! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !! சிலகாலம், அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே இந்த ஆனந்தத்தை !
தம்பி ! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே நாம் வெற்றிபெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா ? எழுதிப் படித்ததுண்டா ? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது! தோழர் சம்பத்தான் அதைப் பேசினார். புதுவையில் நடைபெற்ற மாநாட்டில், 1959, மே. 2, 3 நாட்களில்!