28
வில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம்.
"ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்த சர்க்கார் அஞ்சிப்பஞ்ர நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்று வாய்க்கால் வெட்டுவது. அந்தச் சமயத்தில் நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல, பீகாரில் பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்ப்படும் 'அவரது' மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அதுமட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய்வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதேநேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாகத் தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பலமுறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடி கூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும், அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத் தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி, நேருவுக்குத் தோன்றவில்லை,