உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

பதிப்புரை

திராவிட முன்னேற்றக் கழகம், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நாட்டு மக்களிடையே, திராவிடநாட்டுப் பிரிவினையைப் பற்றி பேசியும் எழுதியும் வந்துள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவர். திராவிடநாடு பிரிவினைக்கானபணியில் தி. மு. கழகம் மிகத் தீவிரமாக ஈடுபட்டு, பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அதன் பொருட்டுப் பலர் சிறைத் தண்டனையும் பெற்றுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜீவாதார இலட்சியம் "திராவிட நாடு திராவிடருக்கே" என்பதாகும். இக்கொள்கையை அடைப்படையாகக் கொண்டே கழகம் சட்டசபை நுழைவையும் மேற்கொண்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

அண்மையில், கழகத்தை விட்டுப் பிரிந்து, புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நண்பர் ஈ. வெ. கி. சம்பத் அவர்கள், "திராவிட நாடு பிரிவினை சாத்தியமற்றது! கிட்டாது! கேட்பது அர்த்த மற்றது!" என்று