உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தேவைப்பட்டால் பிரிந்து போவோம்—இது குறிக்கோளாம்.

விளக்கங்கள் தொடரக்கூடும்.

ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை !

பிரிவினை உரிமையை ஒப்புக்கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளமே !

எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமையையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்தியத் துரைத்தனருகில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா ? அரசியல் அறியாத அப்பாவிகளா ! புரியவில்லை.

போகட்டும், தமிழ்நடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி, மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது ! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு, இதிலே ! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை ! திராவிட இனமக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு—இருந்தும் அவர்களுக்கும் 'பிரிவினை' உடனடியாக வேண்டாம்— பிரிந்துபோகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக்கசப்பாக இருப்பதால், கழகத்தை விட்டு இவர் போகிறார், என்ன நியாயமோ ! ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்கவேண்டும், எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லிக், கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக்கூடாது? இருக்கட்டும்—யார்