35
கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக்கொள்வேன்."
தம்பி ! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர், இன்று சொல்வது என்ன ? அதுவும் 7—4—61-ல், தி. மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்திவைத்துவிட்டு, 9—4—61-ல் தி. மு. கழகத்தைவிட்டு விலகி, 19—4—61-ல் திராவிடநாடு பகற்கனவு; தமிழ்நாடு தான் பலிக்கும் என்று பேசுகிறார்.
உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மனமாற்றம்— திடீர் முடிவு ?
மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா ? இல்லை ! முதலில் விலகல்—பிறகு விளக்கம்—பிறகு புதுக்கட்சி—புதுக்கொள்கை ! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடியதல்லவா !
தமிழ்நாடுகூடப் பிரிய வேண்டுமென்பதல்ல, அவருடைய கட்சியின் குறிக்கோள்.
தமிழரசு—தமிழர் தனி அரசு—தனித் தமிழகம்—இவை அல்ல.
வேண்டும்போது பிரிந்து போகும் உரிமை, சட்டப்படி தரப்படவேண்டும்.
உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க ! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம்—