43
திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள் ?
"நாடகங்கள் நடத்தவில்லையா ? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும் !
"தலைவர்கள் நடிக்கவில்லையா ? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார் !
"பாடல்கள் இயற்றவில்லையா ? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா ? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா !
"நாடகம், இலக்கியம் அவசியம்தான் ; ஆனாலும், அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக் குயில் சரோஜினிதேவியார் கவர்னராகப் பணி புரிந்ததையும், நாவல் நாடக—ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வி யமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும், சுப்பிரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர, வேறு பொருளில்லை."
அவரும் கலை உலகினர் ; எனவே, அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத்தோன்றும். சரி, தோழர் சம்பத்தையே அழைக்கிறேன் ; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும், இந்தப் பிரச்சினையில் !
கழக மாநாடு ! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது ! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார் ; கேண் மின் !