உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

விளைவுதான், என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,

கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்குமொழியினர்
ஆபாசநடையினர்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்

என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும், இதையும் தாங்கிக்கொள்கிறேன்.

வைதிகர்கள் சொல்வார்கள், 'வந்த வழி' என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ளமுடியும் ?

ஆனால், நானாக யோசிக்கிறேன். நிலைமை புரிகிறது நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ளமுடியும்? பாவம்!

அறிவாளிகள்
அடக்க குணமுடையோர்
அழகு நடையுடையோர்
கலைத்தொண்டு புரிவோர்
மாற்றாரும் மகிழப் பேசுவோர்
மாண்பு காத்திடுவோர்

என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்கமுடியும்? எனவேதான், ஏககிறார்கள் ! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய 'வழி' ஆகிவிடுகிறது.