55
தெரிந்தும் பேசாமல் இருக்கின்றனர் நமது அமைச்சர்கள். இவர்கள் எட்டுப் பேர் அந்தஸ்து உயர்ந்தால் போதுமா ?
"வாழ்வும் இல்லை—மதிப்பும் இல்லை—எனவே, ஏன் வெறும் சோற்றுப் பிண்டங்களாக நாம் வாழவேண்டும் ? 100-க்கு 99 பேர் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் நான் நம்மவர்கள் இருக்கிறர்கள். இப்படி உழைக்கின்ற உழைப்பு நமக்குப் பயன்பட வேண்டும். அதற்குத் திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும்."
17—1—60 உதகைப் பேச்சு. தம்பி ! 19—1—61-ல் அவருடைய அந்தப் பேச்சு உதவாப் பேச்சு ஆகிவிட்டது— நல்லவேளையாக நமக்கு அல்ல—அவருக்கு, ஏழ்மை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் விட்டு விடும் தாய் நிலை போலும் ! நாமும் ஏழைகள் தாம், என்றும் கன்னத்தில் குழி விழுந்தபடி, பிஞ்சுக் கரத்தை நீட்டுகிறதே குழந்தை ! எடுத்து வளர்ப்போம்—இரக்கம் இருக்கிறது—இதயம் இருக்கிறதே ! எனவேதான் இன்று புதுக்கட்சி தேவைப்படுவதால் எந்தெந்தக்கருத்துக் குழவிகளை, காட்டிலும், மேட்டிலும் போட்டு விட்டுப் பெற்றவர் போய் விட்டாலும், நாம் எடுத்துப் பாராட்டி வருகிறோம்.
"வடக்கே வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறார்கள்—தெற்கே வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்துகிறார்கள்! வடக்கே வளமான தொழிற்சாலைகள் உருவாக்குகிறார்கள்—தெற்கே உருவாகும் நிலை இருந்தும் உதாசீனம் செய்கின்றார்கள் ! எனவே, திராவிட முன்னேற்றகக் கழகம், தெற்கே உள்ள மாநிலங்கள் நான்கும் தனி உரிமை பெற்று, திராவிடநாடு என இயங்க வேண்டும் என்கிறது. இதற்குத் தமிழகத்தில் ஆதரவு பெருகிவிட்டது; மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகின்றன—நம்முடைய முயற்சிகள் இல்லாமலேயே அங்கெல்லாம் இன்று கழகம் வளர்ந்து வருகிறது.