உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

சுற்றுவது தெரியும், எமது இன இயல்பு அறிய எங்கெங்கோ சுற்றிப் பயனன்ன? என்று கேட்டோம். நேருவின் பேச்சுக் கேட்க மறுத்தோம்.

இப்போது இவர், திராவிட நாடு கனவு என்று கூறுகிறபோது, நேரு பண்டிதரிடம் நாம் காணாத மேதா விலாசம், அனுபவம், வாதத் திறமை இவரிடம் இருக்கிறது என்றா சொக்கிவிடப் போகிறோம். நேருவாவது, துவக்க முதல் திராவிடநாடு கூடாது—கிடைக்காது என்று பேசி வருகிறார், அதனால் என்ன என்று அலட்சியம் செய்கிறோம். இவரோ, பன்னிரெண்டு ஆண்டுகள் பேசிப் பேசி தமது பேரறிவு போதும், எதிர்ப்பாளர்களை அழித்து ஒழிக்க என்று கூறி வந்துவிட்டு, திடீரென்று இப்போது திராவிட நாடு கனவு என்கிறார், அப்படியா? சரி! விட்டுவிடுகிறோம் என்றா கூறத்தோன்றும். கனவு! தம்பி! கனவு! மாநாடுகளிலே முழக்கமிட்டது—பொதுக் கூட்டங்களிலே பரணி பாடியது—பத்தி பத்தியாக எழுதியது—பார்முழுதும் பார்க்கச் சொல்லிப் படம் காட்டியது எல்லாமே கனவு, எப்போது? பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு! திராவிட நாடு என்பது வீண் மனக்கோட்டை, வெறும் கனவு என்கிறார் சிலர், கனவு காண்பது என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக மிகத் தேவை. இதோ வானத்தில் வண்ணமதி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு இருந்த சந்திரன் வேறு, இப்பொழுது உள்ள சந்திரன் வேறு, பத்து நாள் முன் வாழ்ந்த வையம் வேறு.

"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரோ ஒருவன் கனவு கண்டதன் விளைவாகத்தான் சந்திரனை எட்டிப் பிடித்து, பூமியிலிருந்த பொருளை சந்திரனில் சேர்க்க முடிந்தது. இன்று சந்திர மண்டலத்தை "ராக்கெட்டு" எட்டிப் பிடிக்க வித்தூன்றியவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டவன்தான். அப்படிக் கனவு காண்பதற்கு இன்று சிலர் தேவைப்படுகிறார்கள்."