84
கொள்வது ஒரு ரகம் ; தம் வாழ்நாளில் பெரும் பகுதியும் தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றிகிட்டாது அவசரத்தால் கொள்கையை மாற்றக் கொள்பவர் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள் ; வேறு சிலர் இருக்கிறார்கள்—அவர்கள் உள்ளமே அவ்வளவுதாள் !"தம்பி ! திடீரென்று இப்பொழுது, கொள்கையை மாற்றிக் கொண்டாரே, இவர், எந்த ஏகம்? காளை வயது ! கடுஞ்சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத் தன் உழைப்பு உருவான பலன்தராதது கண்டு மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்க முடியாது, உள்ளமே அவ்வளவுதான் — என்று கூறப்படும் ரகத்தில், சேர்க்க மனம் இயம் தரவில்லை. மிச்சம் இருப்பது? மீண்டும், படித்துத்தான்பாரேன்—புரிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்ப்பார்ப்பதா? எப்படி என்று கேட்டால்—ஏன்? முன்பு வந்தக் கொள்கைக்காக எப்படியெப்படி அடித்துப் பேசுனேனொ அதுபோல் இந்தப் புதுக் கொள்கைக்கும் பேசுகிறேன்—மக்களா சேரமாட்டார்கள்? என்றா கூறுவது. மக்கள் என்ன மெழுகா—விருப்பம்போல உருவம் பெறச்செய்ய !
ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க நீங்கள் கழகத்துக்கே பயன் படவேண்டும் என்று யோசனை கூறினாராம்—கலைத்தொடர்பு வேண்டாம் என்றாராம், கேட்க வில்லையாம், அதுதான் கோபமாம் !
அப்படியா தம்பி ! யோசனை என்ன ? புத்திமதி கூறட்டும்; பரவாயில்லை; நான் இப்பொழுது, கழகக்காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய் அல்லவா ? மணி மூன்று— விடியற்காலம், எழுதிக் கொண்டிருக்கிறேன் ; இது முடிந்ததும் ஆங்கில ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகுத்