உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

தொடர்பு எனக்கு எந்த அளவு ? என்ன வகை ? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன ? ஒரு கணக்குப் பார்க்கலாமா, என்று கேட்டுப் பாரேன்—குறை கூறுவோரை. புதிய வீடு வாங்க— அலங்காரச் சாமான்கள் வாங்க—அனந்தராம் தீட்சதரின் காலட்சேபம் கேட்க—வாடகைப் பணம் முறைப்படி பெற—வழக்கு வேலைகளைக் கவனிக்க—செலவிடும் நேரம், உண்டா, எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும்நேரத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு ! நான் தெடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள்—ஒன்று எம். ஜி. ராமச் சந்திரன் நடிப்பது—மற்றொன்று கே ஆர். இராமசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன், எம். ஆர். ராதா நடிப்பது ; இரண்டுக்கும் நானல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன் ; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவு தான், என் தொடர்பு ! மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணி நேரம் ! எடுத்த படத்தைக்கூட தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம்—நான் சரிவரப்பார்க்கக் கூட இல்லை ! இது என் தொடர்பு! இது கழக வேலையை என்ன பாதித்து விட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை யிருந்தால் விளக்கலாமல்லவா ? போகட்டும்—இதைக் தவிர, இனி, என்றென்றும் கலைத் தொடர்பு வேண்டாமென்று, தம்பி ! உனக்குக் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு ! ஏற்றுக் கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள் ஒரு படத்துக்காவது, கதை எழுதுங்கள் அண்ணா ! என்று என்னிடம் சொன்னவாரா நாட்டினரைப் பார்த்து, சேச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே—என்றா பேசுவது?

அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம் என்றால், தம்பி! ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும்

கொ—6