உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

"இலங்கைப் பிரதமாயிருக்கும் பண்டார நாயகரும் கதைகள் எழுதுவார்—அதுவும் மர்மக் கதைகள். மர்மக் கதைகள் என்றால் என்ன என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் அண்மையில் காமன்வெல்த் மாநாட்டை ஓட்டி இலண்டனுக்குச் சென்றிருந்தபோது, வெறுக்கையோடு போகவில்லை—தாம் எழுதின 4-மர்மக் கதைப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றார்; ஏன் ? அங்குள்ள கம்பெனி மூலம் அவைகளை பிரசாரம் செய்வதற்காகத் தான். இவர் என்ன, மர்மக்கதை எழுதுகிறாரே, இவர் அரசியலில் இருக்கலாமா? என்று இலங்கையில் எந்தப் புத்திசாலியும் கேட்கவில்லை; எந்தக் காமராசரும் கேட்கவில்லை. ஆனால், இங்கே கேட்கிறது அந்தக் குரல்.

"இப்படி, சொத்தையான வாதங்களையும் உளுத்துப் போன வாதங்களையும் கூறி நம்மை ஆபாசப்படுத்திவிட நினைக்கிறார்களே தவிர, அறிவுடனும் நீதியோடும் நேர்மையோடும் தர்க்க ரீதியாக நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இலட்சியங்களையும் எதிர்த்துப் பேசுவார் யாரையும் காணோம்."

அது முன்பு ! என்பீரேல், இதோ அவருடைய பாராளுமன்றப் பேச்சு !

தணிக்கைக் குழுவைப்பற்றிப் பேசுகிறார் டில்லி பாராளுமன்றத்தில்.

"ஒரு பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்ப்பட உலகில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை வழக்கமாகப் படமாக்கப்பட்டுவந்த புராணம், மற்றும் இதிகாசக் கதைகளுக்கு மாறாக நவீன காலப் பிரச்சினைகள் பற்றிய கதைகள் படமாக்கப்படும் நிலை முகிழ்த்தது. இந்த மாற்றத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தமது வேலைக்காரி—நல்ல தம்பி—போன்ற கதைகள் மூலம் தோற்றுவித்தார். அவர் திராவிட