உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கலந்து பேசமாட்டார்—குறிப்பறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தாலொழியப் பதவிகளுக்கு வரலாகாது என்பார்—ஆமாம்! என்றுரைக்க வேண்டும் அடுத்த முறை, ஐந்தாண்டு வேண்டாம், மூன்று ஆண்டுகளே போதும் என்பார்—ஆமாம்! ஐந்தாண்டு அதிகம்—மூன்று ஆண்டுகளே போதும் என்றுரைக்க வேண்டும்.

கழகக் காரியத்தில் இன்னார் இருப்பது ஆபத்து என்பார்—விலக்கி வைத்திருக்கிறோம் என்று கூற வேண்டும்—அடடாடா; ரொம்ப நல்லவர்! நிரம்பத் திறமைசாலி! அவர் எந்த அக்னிப் பரிட்சைக்கும் தயாராக இருப்பவர்—என்பார், ஆமாம்! என்று சொல்ல வேண்டும்.

நமது கழகத்தைத் துச்சமென்று எண்ணும் கலைஞனை நாம் மதிக்கலாகது என்பார்—ஆமாம்! மதிக்கத்தான் கூடாது என்றுரைக்க வேண்டும்; கழகத் தொடர்பு இருந்தாலென்ன?இல்லாது போனால் என்ன? கலைஞனை அவனுடைய திறமைக்காகப் பாராட்ட வேண்டும் என்பார்—பாராட்டுவோம் என்றுரைக்க வேண்டும்.

தம்பி! இப்படி ஒரு பயங்கர நிலைமை வளர்ந்து, நான் எல்லாவற்றுக்கும் இசைவு தந்தேன் — என் சொந்த விருப்பு வெறுப்புப் பற்றிய கவலையைக்கூட விட்டொழித்து, ஆனால், திராவிடநாடு வேண்டாம், பிரிவினையே வேண்டாம், இந்தியப் பேரரசிலேயே ஒட்டிக் கொண்டிருக்கலாம், சமதர்மம் கூட வேண்டாம், என்பதற்குமா, நான் சம்மதிக்க முடியும்!

கொள்கையைக் கடைப்பிடித்தபடி கோபதாபம் காட்டினாலும், முறைகளை மாற்றினாலும், வசவுகளை வீசினாலும், பொறுத்துக் கொண்டேன். ஆனால், கொள்கையையே மாற்றி விடும்போது, நான் எப்படி இணங்க முடியும்—