பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14

રૂર્ડિં.

கோகோ ஆட்டம்

விளையாட்டும் போரிடும் முறையின் அடிப்படையிலே தான் அக்காலத்தில் தோன்றின என்பதற்கு ஆதாரம் இருக்கின்றன.

அந்த அடிப்படையில்தான், ரதோடா போர் முறைக்கேற்ப, கோகோ ஆட்டம் பரிணமித்து இருக்கலாம் என்று நம்பலாம். போர்க்களத்திலே தலைவன் உத்திரவிற்கிணங்க தட்டாது செல்லுதல், ஆணையிடும் பணியை மேற்கொள்ளுதல், எந்த நிலையிலும் ஆயத்தமாக இருத்தல், அயராதுழைத்தல் போன்ற குணங்களை வளர்க்கும் தன்மையிலேதான் கோகோ ஆட்டமும் அமைந்திருக்கிறது.

கோகோ ஆட்டம் மகாராஷ்டிர மக்களின் வழிவழி ஆட்டமாக மலர்ந்து வந்திருக்கிறது என்ற கருத்தும் வரலாற்றுலகில் உலவி வருகிறது. என்றாலும், எவ்வாறு இது தோன்றியது? மகாராஷ்டிர மக்களிடையே எவ்வாறு வேரூன்றியது? எங்ங்னம் இத்தகைய எழிலார்ந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது புதிராகத்தான் இருக்கிறதே தவிர, நமக்குப் புதிதாக எந்தவிதமான சான்றுகளும் இதுவரை கிடைத்தபாடில்லை.

இருபதாம் நூற்றாண்டுவரை, இந்த ஆட்டம் பண்படாத நிலையிலேதான், பழங்கால மக்களிலிருந்து இக்கால மக்கள் வரை ஆடப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு இடங்களில், பல்வேறு கலாச்சாரம் நிறைந்த, பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கோகோ விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அத்துடன், பல்வேறு விதமான விதிகளைப் பெற்றே, இடத்திற்கேற்ப ஆடப்பெற்று வந்திருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகத்தான் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/16&oldid=557468" இருந்து மீள்விக்கப்பட்டது