பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5

வருகின்றன. எல்லா பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப் பெறுவதுடன், மாநிலப் போட்டி அளவில் பெண் களுக்காகவும் போட்டிகள் நடத்தப் பெறும் இந்நாளில், எனது நூல் சிறந்த துணைதரும் நூலாக அமையும் என்பது என் திண்ணம்.

கோகோ ஆட்டத்தில் அகில இந்திய கோகோகழகம் திருத்தித் தந்த புதிய விதிகளை இங்கு தந்திருக்கிறேன். பயன்படுத்திக் கொள்வோர்க்கு இந்நூல் பெரிதும் உதவும் என்பது என் நம்பிக்கை.

விதிகளை பலர்சரிவரப் புரிந்து கொள்ளாததாலேயே விளையாட்டுப் பேர்ட்டிகளில் வேண்டாத சச்சரவுகள், விதண்டாவாதங்கள், விவாதக் கூச்சல்கள் நடைபெற்று விடுகின்றன. அவற்றின் தன்மைகளையெல்லாம் ஆராய்ந்து, அவற்றைத் தவிர்க்கும் முறைகளையெல்லாம் தந்திருக்கிறேன். திருந்திய புது விதிகளுடன் இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது.

இதுவரை எனது நூல்களை ஆதரித்து வந்த அன்பர் உலகம் இந்நூலையும் பெரிதும் ஏற்று உதவும் என்று நம்பி உங்கள் கையில் படைக்கிறேன்.

வணக்கம்.

அன்பன், எஸ்.நவராஜ் செல்லையா

1984-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது பதிப்பில் ஆசிரியரின் முன்னுரை அப்படியே அச்சிடப் பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/7&oldid=557459" இருந்து மீள்விக்கப்பட்டது