பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கோகோ ஆட்டம்



அதாவது, விளையாட்டுக்குரிய செயல்கள் வெள்ளமென்றால், விதிகள் என்பவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி இதமுடன் வழிபோக வைக்கின்ற இருகரைகள் ஆகும்.

வேகமாக ஓடுவது, வேகமாக விரட்டுவது, அதுவும் ஒரு குறுகிய குறிப்பிட்ட எல்லைக்குள்ளே விதிகளிலிருந்து சற்றும், பிறழாது ஓடுவது என்பதற்கு சாமர்த்தியம் மட்டுமல்ல. நிறைந்த சாதுர்யமும் வேண்டும். 100 மீட்டர் ஓட்டத்தை ஒரேயடியாக ஓடி, ஒரே மூச்சில் முடித்துவிடலாம். அது எளிது. ஆனால், ஓடுவது, நிற்பது, சமாளித்துத் திருப்புவது என்று பல விரைவோட்டங்களை (Sprints) ஓட வலிமையும் நெஞ்சுரமும் உள்ளவர்களையே கோ கோ ஆட்டத்திற்குரிய ஆட்டக்காரர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆமையாக ஊர்பவர்களும்; யானையாக அசைபவர்களும், இந்த ஆட்டத்திற்குப் பயன்பட மாட்டார்கள். காக்கை போல சுறுசுறுப்பும், முயலின் வேகமும், நரியின் தந்திரமும் உள்ள ஆட்டக்காரர்களே கோ கோ ஆட்டத்தில் புகழ் பெற முடியும். சிறப்புற ஆடவும் கூடும்.

ஒரு குழுவை அமைத்து உருவாக்க வேண்டும் என்று முயல்பவர்கள், மேலே கூறிய கருத்துக்களைப் புரிந்து கொண்டு, தேர்ந்தெடுக்கும்போது, கீழ்வரும் குறிப்புக்களையும் பின்பற்றினால், எண்ணிய பயன் கிடைக்கும். எண்ணாத திருப்தியும் சுகமுற கிடைக்கும்

'நன்றாக ஆடக் கூடியவர்கள் உள்ள குழுவையே எல்லாரும் விரும்புவார்கள்; நடைபெறுகின்ற ஆட்டமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/72&oldid=1377507" இலிருந்து மீள்விக்கப்பட்டது