பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

153

அச்சம் தோன்றவில்லை. ஆனால், இந்த சரோ ஒட்டாமல் போகும் பாதையும், முரண்டு பிடிவாதமும் அவளுக்கு அடிமனதில் பீதியைக் கலக்குகிறது. இளங்கன்று பயமறியாது. ஏதேனும் ஆகிவிட்டால்...? சரக்கென்று வரப்பில் கால் நழுவுகிறது.

வழுவழுவென்று காலடியில் ஏதோ போனாற்போல உடல் முழுவதும் துடிப்பாகப் பரவுகிறது.

கையில் டார்ச் விளக்கு இருக்கிறது.

அதை அழுத்துகிறாள். மஞ்சளாக ஒளி...

பயிரை மிதித்திருக்கிறாள். பயிறு பிஞ்சுக் காய்களுடன் மிதியுண்டிருக்கிறது. ஆனால் அவள் அங்கே கால் வைக்கவில்லையே? பிரமையா? அப்படித்தான் நடந்து வந்தாளா?

“யாரு? செவந்தியக்கா? நீங்க எங்க?” பின்னிருந்து வேல்ச்சாமி.

“நீங்க ஏம்மா இந்த ராவுல? தண்ணிதா நா பாக்குறனே? ஈரம் இருக்கு. இனிமே நாளக்கிக்கூட ஆறப்போடலாம். கன்னியப்பன் செத்த முன்ன வந்திட்டுப் போனா, பயிர யாரம்மா எடுத்துப் போகப் போறாங்க?”

“கன்னியப்ப வந்தானா?”

“வந்தா. அம்மா, உங்ககிட்ட ஒண்னு சொல்லவா? பட்டாளக்காரர் வூட்ல ஒரு பொண்ணிருக்குமே! அதுக்கு... அது அவுரு மகளா...?"

"மகளாமா...?"

“நாங்கேட்டா, நீங்க என்னக் கேக்குறிய திருப்பி இவன் அந்தப் பொண்ணுக்கூட ஒரு இதுவா இருக்காப்புல. பாட்டி வந்து செத்த நேர்முன்ன பிலுபிலுன்னு புடிச்சித் திட்டிச்சி. பய மவனே, உன்ன நா நாயா ஒழச்சிக் கஞ்சியூத்தி ஆளாக்கின, ஏதோ சாதி... அறுத்துப் போனது. அத்தப் போயி கட்டுவேங்குற, அறிவிருக்காடா? ஒனக்கு ராசாத்தி போல பொண்ணக் கட்டக் காத்திருக்காங்கடா. அறுவு கெட்ட