பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கோடுகளும் கோலங்களும்

புருசன். அவனுக்கும் நல்ல இடம். சரோசா அவனுக்கு ஏற்றவளல்ல. கைநழுவிப் போனதுதான்...

கடலை முற்றுவதற்கு முன் பயறு கொத்துக் கொத்தாகப் பழுக்கிறது. அவ்வப்போது பறித்துக் கொண்டு வந்து வீட்டு முற்றத்தில் போட்டு அது காய்கிறது. அம்மா தடியில் அடித்து ஒரு படி பயிறு போல் எடுக்கிறாள். பொக்கில்லை. நல்ல திரட்சியாக இருக்கிறது.

கடலைப் பயிர் மேலே செடி பழுத்துவிட்டது. பச்சை இலைகள் பழுத்த செடியில் புள்ளிகள் போல் தெரிகின்றன. சாந்தியும்கூட அன்று வந்திருக்கிறாள். கொல்லைக்குச் சென்று ஒரு செடியைப் பிடுங்கிப் பார்க்கிறார்கள். கடலை சலங்கை சலங்கையாகப் பிடித்திருக்கிறது. ஒன்றை உடைத்துப் பார்க்கிறார்கள். தோல் முற்றிப் பழுத்துவிட்டது.

"அக்கா, புடுங்கிடலாம்...”

“புதன் கிழம புடுங்கிடலாம். இன்னக்கித் திங்கள்...”

சாந்தி சைகிளில் ஏறும் போது “அந்தப் பக்கமா, கன்னியப்பன பாத்தீன்னா சொல்லிடு. கடல புடுங்கறமின்னு!”

“சொல்றேன்க்கா” என்று சொல்லிவிட்டு அவள் போகிறாள்.

புதனன்று காலையில், கன்னியப்பன் ஏழெட்டுப் பேரைக் கூட்டி வருகிறான்.

சாந்திதான் முதல் குத்தைப் பிடுங்கி, "அக்கா சாமி கும்பிட்டுக் கர்ப்பூரம் காட்டுங்க?” என்று வைக்கிறாள்.. சாந்தி கை தனக்கு மிகவும் உதவியான நெருக்கமான, அதிர்ஷ்டமான கை என்று நம்பிக்கை.

எல்லாப் பெண்களும் குலவை இடுகிறார்கள்.

நீ முந்தி, நான் முந்தி என்று கடலைப் பயிரைப் பிடுங்கி ஆங்காங்கு ஈரமண் உதிர்த்துக் குவிக்கிறார்கள். செவந்தி மனம் துளும்பப் பார்க்கிறாள்.

ஒரு பொக்குக் கடலை கூட இல்லை. ஏக பேச்சும் சிரிப்புமாக இருக்கிறது. கன்னியப்பன், வேல்ச்சாமி, லட்சுமி,