பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இதற்கு முன்பு எந்தப் பேனாவும் வாங்கியதும் என் பெயர் எழுதும் இதுவோ சுத்தமோசம் உன் பெயர் எழுதுகிறது......' ஏகாந்தத்தில் மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுக்கும் ரோஜா இதழ்கள் மீராவின் வரிகள். மழலை இனிதென்று வள்ளுவரே சொன்ன உண்மைக்கு ஒரு மெருகு கொடுக்க முனைகிறார் மீரா. மழலை அப்படி இனிமையாக இருப்பதற்குக் காரணம் அது மழை தந்த இனிமையாம். முன்னொரு காலத்தில் மழை நீர் பிடிக்கக் குடம் வைத்தார்களாம். குடத்தில் அலைபாய்ந்த நீரில் ஒரு சங்கீதம் - ஆ. மழை நீர் சுவைத்த இனிய ஓசையை மழலை என்றனராம். குழந்தையின் கொஞ்சு தமிழுக்கு அந்தப் பெயரை வைத்துவிட்டார்களாம். இது சொல்லாராய்ச்சி அல்ல. சொல்லுக்குள் இருக்கும் சுகம் பற்றிய ஆராய்ச்சி! இப்படித்தான் 'மழைநீர் கவிதையில் கிணறு வெட்டப் பூதம் புறப்படும் ஆராய்ச்சியும்! நகைச் சுவை மீராவின் கவச குண்டலம். பக்கத்துக்குப் பக்கம் புன்னகையை ஒவியமாக ஒட்டி வைத்து விடுகிறார். உயர்ந்த பாரீஸ் சென்ட்டின் மெல்லிய நறுமணம் போல் அது கவிதைகள் தோறும் உலாவிக் கொண்டே இருக்கிறது. 'ஒதிய உடம்பு தோறும் உயிரென உலாயதன்றே என்று கம்பன் சிலிர்த்துக் கொள்வானே, அப்படி உலாவுகிறது நகைச்சுவை! ஆனால் அந்த நகைச் சுவைக்குள் ஒரு வேதனை குடியிருக்கும். சுவரொட்டி கவிதையில் தமிழ்ச் சமுதாயம் போஸ்டர் பித்துப் பிடித்து அலைவதை நயமாக நையாண்டி செய்கிறார். இப்படியே போனால்,

  • ダ装